திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

DMK Minister AV Velu
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, கல்லூரி, பள்ளிகள் உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த திமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ. வேலு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

இது தவிர அவருக்கு சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருள் பொறியியல் கல்லூரி, அங்குள்ள அவரது மகன் மற்றும் மாமியார் வீடுகள் உள்பட 8 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இதை சட்டப்பூர்வமாக சந்தி்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 12 திமுக முன்னாள் அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ. வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இது தவிர திமுக நிர்வாகிகள் பலர் நில அபகரி்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+