தெலுங்கானா பகுதியை சேர்ந்த 5 காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சியிலிருந்து விலக முடிவு
ஹைதராபாத்: தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் 5 பேர் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணையக் கூடும் என்றும் தெலுங்கானா காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கக் கூடும் என்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெபல்லி எம்.பி. விவேகானந்த், கரீம்நகர் எம்.பி. பொன்னம் பிரபாகர், நகர்கர்னூல் எம்.பி. மண்டா ஜெகன்னாதன், நலகொண்டா எம்.பி. குட்ட சுகேந்தர் ரெட்டி மற்றும் போங்கிர் எம்.பி. ராஜகோபால் ரெட்டி ஆகிய 5 பேரும் காங்கிரஸிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா தனிமாநிலத்தை காங்கிரஸ் கட்சி உருவாக்கத் தவறியதால் தாங்கள் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக 5 பேரும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமைக்கு இன்னும் சிறிதுகாலம் கெடு விதித்துவிட்டு வெளியேறுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் பொன்னம் பிரபாகர் எம்பியோ, கெடுவெல்லாம் விதிக்கப் போவதில்லை.. காங்கிரஸிலிருந்து வெளியேறுவது நிச்சயம் என்று பகிரங்கமாகவே எச்சரித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒரு குரூப் வெளியேறிவிட்ட நிலையில் பலவீனப்பட்டு உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாகவே காங்கிரஸ் கட்சி காலியாகிவிட்டால் ஆந்திராவில் காங்கிரஸ் காணாமல்போய்விடும் என்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் புலம்பவும் தொடங்கியுள்ளனர்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications