ராணுவ தளபதிக்கு லஞ்சம் அளிக்க முன் வந்தது யார்?: ஏ.கே. அந்தோணி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராணுவ தலைமை தளபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுவது பற்றி உறுதியான விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அந்தோணி விளக்கம் அளித்து பேசியதாவது:

ராணுவ தளபதி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக சி.பி.ஐ. நேற்றே விசாரணையைத் தொடங்கிவிட்டது. என்னுடைய வாழ்நாள் முழுவதுமே ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறேன்.

இந்த விவகாரம் தொடர்பாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எழுத்துப் பூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை. வாய்மொழி மூலமாகவே புகார் கூறப்பட்டது. ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் திஜேந்தர் சிங்தான் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக வி.கே.சிங் கூறினார். ஆனால் எழுத்துப் பூர்வமான புகார் இல்லாததால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

வி.கேசிங்கிடமும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

லஞ்சம் கொடுத்து எந்த நிறுவனமானது ஒப்பந்தம் பெற்றிருந்தால் அதனை ரத்து செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக முன்பே ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் மனு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பேசிய பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி, இது நான்கு சுவருக்குள் வைத்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது பகிரங்கமாகிவிட்டது. இதனை ராணுவத் தரப்பு தவிர்த்திருக்க வேஎண்டும். இந்த விவகாரத்தில் ராணுவமும் அரசாங்கமும் கண்களை மூடிக் கொண்டு இருந்துவிடக் கூடாது என்றார் அவர்.

ராணுவத்துக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ரூ14 கோடி லஞ்சமாக தமக்குத் தர சிலர் முயன்றனர் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த கருத்தே இத்தனை சர்ச்சைகளுக்கும் காரண்ம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+