மாவோயிஸ்டுகள் அமைப்பில் பிளவு இருப்பது உண்மையே- இரண்டாக பிளவுபடுகிறது?

இது தொடர்பாக ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்ட உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
அமைப்புகள் பிளவுபடுவதும் மீண்டும் ஒன்றிணைவதும் என்பது உலகம் முழுவதும் நடைபெறக் கூடிய் ஒன்றுதான். இதை மறுப்பதற்கில்லை. இது வெளிப்படையானதுதான். இதை மறைப்பதற்கு இல்லை.
ஒரிசா மாநில அரசுடன் நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளோம்.இதன் மூலம் எமது நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும் என்று கருதுகிறோம். ஆனால் எல்லையோர மாவட்டங்களில் ஆந்திர மாநில மாவோயிஸ்டு கமிட்டி உறுப்பினர்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இது நிச்சயமாக தவறான சமிக்ஞைதான்...
ஒரிசா மாநிலத்தில் நக்சல்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அப்பாவிகள் பல நூறு பேர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலைமையை மற்ற மாநில மாவோயிஸ்டு தலைவர்கள் புரிந்து கொள்வதில்லை.
இத்தாலியர்களை கடத்தியதற்குக் காரணம் உண்டு. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பழங்குடி இனமக்களை காட்சிப் பொருளாக்கும் ஒரிசா மாநில அரசின் தவறான கொள்கையை சுட்டிக்காட்டத்தான் இத்தாலிய சுற்றுலாப் பயணிகளை கடத்தினோம்.
பழங்குடிமக்கள் என்ன மிருகக் காட்சி சாலைகளில் உள்ள சிம்பன்சி போன்ற குரங்குகளா? அவர்களை வைத்தா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது? இது மிகவும் தவறானது.. அரை நிர்வாணிகளாக இருக்கும் போண்டா இன பழங்குடி பெண்களின் புகைப்படங்களைக் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதா?
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு முனைப்புடன் இருப்பதாக நம்பிக்கை ஏற்பட்டால் மற்றொரு இத்தாலியரை விடுவிப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார் அவர்.
மாவோயிஸ்டுகளிடையே பிளவு ஏற்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
மாவோயிஸ்டு அமைப்பு
ஆந்திர மாநிலத்தில் மக்கள் யுத்தக் குழு என்ற பெயரில் ஆயுதம்தாங்கிய கம்யூனிஸ்டுகள் அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வந்தனர். இதர மாநிலங்களில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (எம்.சி.சி.) என்ற பெயரில் ஆயுதந்தாங்கிய கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்திவந்தனர்.
இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்ட கிஷென்ஜி மேற்குவங்கத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
புதிய அமைப்பாக உருவெடுத்து 8 ஆண்டுகளில் மீண்டும் பிளவை நோக்கி மாவோயிஸ்டுகள் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications