ரூ.1.20 லட்சம் கோடிக்கு தமிழக பட்ஜெட்: அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடி!!

Subscribe to Oneindia Tamil

Tamil Nadu Budget 2012
சென்னை: ரூ.1.20 லட்சம் கோடிக்கு தமிழக பட்ஜெட் போடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தேதியில் தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு கடன் உள்ளது.

பட்ஜெட் குறித்து தமிழக நிதித் துறைச் செயலாளர் சண்முகம் அளித்துள்ள பேட்டியில், இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உற்பத்தித் துறைககும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நலத்திட்டங்கள் தவிர, கடன்களை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் உபரி வருவாய் ரூ.172 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ரூ. 536 கோடி வருவாய் உபரி உள்ளது. வரும் ஆண்டில் ரூ. 2,376 கோடி உபரி வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் கூடுதல் வருவாய்க்கு பெரிதும் உதவியாக இருப்பது, வணிக வரித் துறை தான். மாநில அரசின் சொந்த வரி வருவாயில், 76 சதவீதம் வணிக வரி மூலம் வருகிறது. இது தவிர மாநில கலால் வரி, மத்திய வரிகள் மற்றும் மானியங்கள் மூலம் 24 சதவீதம் வருமானம் வருகிறது.

தமிழக அரசின் கடன்களைப் பொறுத்தவரை, 2011-12ம் ஆண்டில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 1 லட்சத்து 15 ஆயிரத்து 350 கோடி கடன் உள்ளது.

வரும் நிதியாண்டின் கடன் அளவு 1 லட்சத்து 35 ஆயிரத்து 60 கோடி ரூபாயாக கடன் இருக்கும்.

பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால், வருவாய் இழப்பு இருக்கும். ஆனால், நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடுகள் அதிகரிக்கப்படவுள்ளதால் 600 கோடி ரூபாய் வரை கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+