ராணுவத்தினர் போல தமிழக போலீசாருக்கும் குறைந்த விலையில் பொருள் வாங்க சிறப்பு அங்காடிகள்

ரூ. 1 கோடி மானியத்தில் ஆவடி சிறப்பு காவல் படை பயிற்சி மைய வளாகம், திருச்சி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி வளாகம், மதுரை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆறாம் அணி வளாகம் ஆகிய இடங்களில் போலீசாருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டே வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
தமிழக மக்கள் அச்சமின்றி வாழ காவல்துறையினர் இரவு, பகல் பார்க்காமல் பணிபுரிகின்றனர். தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற வேண்டும் என்ற என்னுடைய முயற்சிக்கு காவல்துறையினர் உறுதுணையாக உள்ளனர்.
குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் சிறப்பு அங்காடிகள் சலுகை இதுவரை ராணுவத்தினருக்கு மட்டுமே இருந்தது. தற்போது முதன்முறையாக தமிழகத்தில் காவலதுறையினர் குறைந்த விலையில் அனைத்துப் பொருட்களும் வாங்கும் அங்காடிகளை இன்று திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ராணுவத்தினர் அயல்நாட்டு எதிரிகளிடம் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கிறார்கள்.
மாநில காவல்துறையினர் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுகிறார்கள். அதிமுக அரசு காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்பொழுது பணிபுரியும் காவல் துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் மற்றும் ஒய்வுபெற்ற காவல் துறையினரும், அவர்களது குடும்பத்தினரும், இறந்து போன காவல்துறையினரின் குடும்பத்தினரும் இந்த சிறப்பு அங்காடிகள் மூலம் பயனடைவர். இந்த அங்காடிகளை நல்ல முறையில் பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றார்.
1 கோடியே 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் 26 மாவட்ட ஆயுதப் படை வளாகங்கள் மற்றும் 10 தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகங்கள் ஆகியவற்றில் காவல்துறையினருக்கான மருத்துவ சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் சிகிச்சை பெற ஏற்கனவே மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படை பிரிவினரும், அவர்களது குடும்பத்தாரும் மருத்துவ சிகிச்சை பெற வெகுதூரம் செல்ல வேண்டியிருந்ததால் சிரமப்பட்டனர். எனவே, அந்த சிரமத்தைப் போக்கவே தற்போது நீங்கள் பணிபுரியும் தலைமையிடங்களிலேயே மருத்துவ சேவை மையங்களையும், மருந்தகங்களையும் இன்று திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தாரும் இந்த மருத்துவ சேவை மையங்களையும், மருந்தகங்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications