ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானம்: ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூடுகிறது இலங்கை
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூடுவதற்கு அந்நாடு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ராணுவம் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாக்களித்தன. இதனால் தீர்மானத்தின்போது தனக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் மீது இலங்கை கடும் கோபத்தில் உள்ளது.
இந்த நாடுகளின் மீது தனது எதிர்ப்பை காட்ட இலங்கை தீர்மானித்துள்ளது. அதன் எதிரொலியாக தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐரோப்பிய நாடுகளில் தூதரக அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இலங்கையில் புதிய தூதரகங்கள் திறக்கப்படுகின்றன.
இதனிடையே தீர்மானத்துக்கு எதிராக இந்தியா தவிர பெரும்பாலான ஆசிய நாடுகள் வாக்களித்துள்ளன. இதன் மூலம் இலங்கையுடன் ஆசிய நாடுகள் வலுவான நட்புறவுடன் இருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications