இந்தியப் பாதுகாப்பு 'ஓட்டையை' அம்பலப்படுத்திய ராணுவ தளபதிக்கு கட்டாய விடுப்பு?

ராணுவ விவகாரம் குறித்து ராணுவ தளபதி வி.கே. சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தின் விவரம் நேற்று ஒரு நாளிதழில் வெளியானது மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் தலைதூக்கியது. அரசியல் கட்சிகள் ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தின.
அரசியல் கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தினாலும் மத்திய அரசு அவ்வாறு செய்யாது என்று தெரிகிறது. ஆனால் அவரை கட்டாயவிடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு வலியுறுத்தலாம் என்று தெரிகிறது.
கடித விவகாரம் வெளியானது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி அந்தோணியிடம் கூறுகையில், ரகசியமாக வைக்க வேண்டிய விவகாரங்கள் எல்லாம் ஊடகங்களுக்கு கிடைக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்றார்.
ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்தால் அது தவறான உதாரணமாகிவிடும். அப்படி செய்தால் பிற நாடுகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும் என்று ஒரு அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
மற்றொரு அமைச்சர் கூறுகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மூலமாக அல்லாமல் தானே பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதியதன் மூலம் ராணுவ தளபதி ஒழுங்கு விதிமுறைகளை மீறியுள்ளார். ஏற்கனவே வயது விவகாரத்தில் இது போன்று தான் நடந்து கொண்டார் என்றார்.
வி.கே. சிங்கின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications