2 நகை கொள்ளையர்கள் கைது- ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள கடைக்கடையில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்த இருப்பு பெட்டியை திருடி சென்ற 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பாதுகாப்பாக வைத்திருந்த கொள்ளையனின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது நகை கடையில் இருந்து கடந்த 9ம் தேதி 6.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சம்பவம் நடந்த நகை கடைக்கு எதிரே இருந்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் சம்பவத்தன்று அப்பகுதியில் நடமாடியவர்கள் குறித்த விவரத்தை போலீசார் திரட்டினர்.
மேலும் நகை கடையில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதனை தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது நெல்லை மாவட்டம் குப்பனாபுரத்தை சேர்ந்த ராஜா(32) என்பவர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் குமணன்தொழுவனதாய்புரத்தை சேர்ந்த மனோகரன்(28) உடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.
சுரேஷ்குமாரின் நகை கடையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்த பெட்டியை காரில் தூக்கி சென்றுள்ளனர். அதன்பிறகு அருகில் உள்ள கண்மாய் கரையில் அதன் லாக்கரை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்து கொண்டு பெட்டியை கண்மாய்க்குள் ஏறிவிட்டு தப்பியோடி உள்ளனர்.
அதன்பிறகு கொள்ளையடித்த நகைகளை மனோகரனின் தாயார் ஜெயலட்சுமியிடம் கொடுத்து வைத்தனர். இதேபோல தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள ஒரு அடகு கடையில் இருந்து 2.5 கிலோ வெள்ளிக் கொலுசுகளை இருவரும் சேர்ந்து திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜா, மனோகரன், ஜெயலட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.5 கிலோ தங்க நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரொக்கம் ரூ.25,000, தப்பி செல்ல பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடியாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications