ரெய்டு வந்த அதிகாரிகள் எனது மனைவியை மிரட்டியுள்ளனர், ஆனால் பயப்படமாட்டோம்: உதயக்குமார்

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தது. அங்கு கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமாரின் வீட்டு மாடியில் உள்ள அவரது சாக்கர் அறக்கட்டளை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை குறித்து தற்போது இடிந்தகரையில் முகாமிட்டுள்ள உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாகர்கோவில் பழவிளையில் சாக்கர் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி பள்ளியை நடத்தி வருகிறேன். 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வாட்முல் என்ற பவுண்டேஷன் மூலம் எங்கள் டிரஸ்ட்டுக்கு ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் பணம் வந்தது. அது பள்ளிக்கு வாகனம் வாங்குவதற்காக தரப்பட்டது. அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெற்று வங்கி கணக்கு தொடங்கி பணத்தை பெற்றுக்கொண்டோம்.
அதோடு எனது சொந்த பணம் ரூ. 3 லட்சத்தை சேர்த்து செலவழித்து பள்ளிக்கான வாகனத்தை வாங்கினோம். இதற்கு முறையான கணக்கு உள்ளது. கடந்த 1 மாதத்துக்கு முன்பு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் உங்கள் அறக்கட்டளைக்கு வந்த வெளிநாட்டுப் பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் இதற்காக டெல்லி வரவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. கூடங்குளம் போராட்டத்தில் நான் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால் டெல்லிக்கு வர இயலாது என்று பதில் அளித்தேன்.
அதற்கு அவர்கள் இம்மாதம் 29 அல்லது 30-ந்தேதியில் நாகர்கோவில் வந்து உங்கள் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை பரிசோதனை செய்வோம் என்று கூறி இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று எனது நாகர்கோவில் வீட்டில் சோதனைக்கு வந்துள்ளனர். எங்கள் அறக்கட்டளைக்கு அமெரிக்காவில் உள்ள வாட்முல் பவுண்டேஷனின் தமிழகப் பிரதிநிதியான தமிழ்நாடு பவுண்டேஷன் மூலமும் சிறு சிறு பண உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளிக்கான மேஜை, நாற்காலிகள் போன்ற பர்னிச்சர் சாதனங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் எனது ஆடிட்டர் மூலம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனது வரவு, செலவு விவரங்கள் எதையும் மறைக்கவில்லை. எனது வீட்டில் அறக்கட்டளை தொடர்பான தஸ்தாவேஜுகள் அனைத்தும் உள்ளது. அவை எங்கெங்கு இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். ஆனால் நான் இடிந்தகரை போராட்டத்தில் இருப்பதால் இங்கிருந்தபடியே எனது மனைவிக்கு உரிய தகவலை கொடுத்து ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன்.
ஆனால் அதிகாரிகள் மிரட்டுவது போல் நடந்து கொள்வதாக என் மனைவி என்னிடம் கூறினார். அதிகாரிகளின் எந்த மிரட்டலுக்கும் நாங்கள் பயப்படபோவதில்லை என்றார் உதயக்குமார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications