இலங்கையில் இருந்து போட்டோ ஆல்பத்தில் வைத்து தங்கம் கடத்தியவர் சென்னையில் கைது
சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு போட்டோ ஆல்பத்தில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று இலங்கை தலைநகர் கொழும்பில் வந்த விமானம் தரையிறங்கியது. இதில் பயணித்து வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது ரிப்பாயா(50) என்பவர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்லேட், போட்டோ ஆல்பம் ஆகியவற்றின் உள்ளே இருந்த கம்பிகள் தங்கமாக இருந்தது.
மேலும் அவர் எடுத்து வந்த சூட்கேசின் கைப்பிடி தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரது பொருட்களில் இருந்து 890 கிராம் தங்கம் இருந்தது. அவரது பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், முகமது ரிப்பாயாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications