இலங்கை கடற்பட்யால் தமிழக மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு- உயிர்தப்பி கரை சேர்ந்தனர்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை மீண்டும் விரட்டியடித்து அட்டூழியம் செய்துள்ளது.

ராமேசுவரம் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலை 500 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மாலைநேரத்தில் வலை விரித்து மீன்பிடிக்க முயன்றனர்.

அப்போது சிங்கள கடற்படையினர் 30 பேர் 6 குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர். வ்லைவிரித்து மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை அவர்கள் விரட்டியடித்தனர்.

இதனால் ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை எடுத்து கொண்டு அவசரமாக வேறு பகுதிக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அவர்கள் மீன் பிடிக்காமல் தவித்தனர். பின்பு இரவு மீன் பிடித்து கொண்டு இன்று அதிகாலை அவர்கள் கரைக்கு திரும்பினர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தங்களை விரட்டியடித்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+