சிவகங்கையில் ஆயுதங்களுடன் எஸ்.ஐ. ஏட்டை துரத்திய ரவுடி கும்பல்: மக்கள் பீதி
சிவகங்கை: சிவகங்கை அருகே ரவுடிகளிடம் இருந்து உயிருக்கு பயந்து எஸ்.ஐ., ஏட்டு ஆகியோர் ஓட்டம் எடுத்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி டாஸ்மாக் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டு விற்பனையாளர் வெங்கடேசனிடம் தகராறு செய்தது. இது குறித்து கடை ஊழியர்கள் போன் மூலம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பயிற்சி எஸ்.ஐ. பாரதிராஜா, ஏட்டு காசிவிஸ்வநாதன் ஆகியோர் வந்து ரவுடி கும்பலை விரட்டினர். அப்போது அந்த கும்பல் தங்களிடம் இருந்த கத்தி, அரிவாளை எடுத்துக் கொண்டு பயிற்சி எஸ்.ஐ. மற்றும் ஏட்டு ஆகியோரை விரட்டியது.
அதில் அருகில் உள்ள கடைக்குள் புகுந்து ஏட்டு தப்பித்தார். இருப்பினும் அவரை நோக்கி ரவுடிகள் சோடா பாட்டில்களை வீசினர். அடுத்து பயிற்சி எஸ்.ஐ.பாரதிராஜா மின்னல் வேகத்தில் அவர்களிடம் இருந்து தப்பியோடினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பின்பு டாஸ்மாக் விற்பனையாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மாரநாடு கருப்பையா, ஆவரங்காடு மைக்கேல் முனியாண்டி, கருப்புராஜா, ஆட்டோ டிரைவர் கருப்பையா ஆகியோர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் கருப்பையா, மைக்கேல் முனியாண்டி, கருப்புராஜா ஆகிய 3 பேரும் டாஸ்மாக் கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு ஜாமீனில் வெளி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications