ஜெயலலிதாவுடன் அருண் ஜெட்லி சந்திப்பு: ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த பாஜக தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி இன்று காலை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜேட்லி, முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவர் முதல்வரான பிறகு இப்போதுதான் சந்திக்கிறேன். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். தேசிய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம்.

மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அதுபற்றியும், விவாதித்தோம். இதில் முதல்வர் எடுத்துள்ள நிலையும் பாஜகவின் நிலையும் ஒன்றாகவே உள்ளது என்றார்.

கேள்வி: சேது சமுத்திர திட்டம் குறித்து பேசினீகளா?

ஜேட்லி: அதுகுறித்துப் பேசவில்லை.

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசினீர்களா?

ஜேட்லி: இல்லை

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமான பாஜக தலைவர் என்றால் இப்போதைக்கு அது அருண் ஜேட்லி தான். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடியிடம் தனி மரியாதை உண்டு. இருவருக்கும் இடையே நட்புணர்வு நிலவும் நிலையில், அவரது ஆதரவாளரான ஜேட்லி ஜெயலலிதாவை சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவைப் பெற காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. இந் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+