விருதுநகரில் +2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் சுமார் 50 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி இந்த மாத இறுதியில் முடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் சூலக்கரை கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட 6 பாடங்களின் விடைத்தாள்களை திருத்த முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் 100 பேர் அங்கு வந்தனர்.

வெறும் 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களை மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக நியமித்துள்ளதை கண்டித்து அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தனர்.

இது குறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் 50 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் துவங்கியது. விருதுநகர் சூலக்கரை கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்பட 6 பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தப்படவுள்ளன.

மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராக குறைந்த அனுபவமுள்ள ஆசிரியர்களை நியமித்துள்ளது மூத்த ஆசிரியர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. இப்பணிக்கு மூத்த முதுகலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், சென்ற முறை பிளஸ் 1 விடைத்தாள் திருத்தியதற்கான உழைப்பூதியம் கடந்த ஓராண்டாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+