ஒரே நாளில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்: தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிதித்துறை சிறப்பு செயலாளர் பி.செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் மாற்றப்பட்டு தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர்- செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டு வணிக வரிகள் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். வணிக வரிகள் கமிஷனராக பணியாற்றி வரும் ஹேமந்த்குமார் சின்ஹா இடமாற்றம் செய்யப்பட்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் மற்றும் டைரக்டர் ஜெனரல் பதவியில் பணி அமர்த்தப்படுகிறார்.
மத்திய அரசு பணியில் இருந்து வரும் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். திண்டுக்கல் முன்னாள் கலெக்டர் கே.நாகராஜன் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம் முன்னாள் கலெக்டர் சிவசண்முகராஜா பிற்படுத்தப்பட்டோர், மிகவும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை துணைச் செயலாளராக பணியமர்த்தப்படுகிறார்.
திருவள்ளூர் சப்-கலெக்டர் எல்.சித்திரசேனன் இடமாற்றம் செய்யப்பட்டு வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ராணிப்பேட்டை சப்-கலெக்டர் டி.ஜெகநாதன் மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக இணை கமிஷனராக பணி அமர்த்தப்படுகிறார்.
நிதித்துறை சிறப்பு செயலாளர் பி.செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் மாற்றப்பட்டு தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர்- செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை துணைச் செயலாளராக பணியாற்றி வரும் ஏ.சுகந்தி இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழக (தாட்கோ) நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாட்கோ நிர்வாக இயக்குனர் சி.விஜயராஜ்குமார் மாற்றப்பட்டு சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) பணி அமர்த்தப்படுகிறார். சுனாமி நீடித்த வாழ்வாதார திட்டத்தின் திட்ட இயக்குனர் விக்ரம் கபூர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நில நிர்வாக கமிஷனர் சுவரண்சிங் மாற்றப்பட்டு தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக்கழக (சிப்காட்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர்-செயலாளர் கி.தனவேல் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக்கழக (டிட்கோ) நிர்வாக இயக்குனராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முன்னாள் செயலாளர் கே.கோபால் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications