இந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சியா?: பிரதமர்-பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு

இந்திய ராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது சரியல்ல என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார்.
வயது பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ராணுவ தளபதி வி.கே.சிங் வழக்கு தொடர்ந்திருந்தபோது மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் கடந்த ஜனவரியில் ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தலைநகர் டெல்லியில் குவிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமருக்கு உளவுத்துறை தகவல் கொடுத்ததாகவும், அதன் பிறகு அந்த ராணுவப் பிரிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை இதனை பிரதமர் மன்மோகன் சிங்கும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனியும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ராணுவ தளபதியின் பதவியை யாரும் கொச்சைப்படுத்த முயலக் கூடாது என்றார்.
ஆண்டனி கூறுகையில், ராணுவத்தின் இதுபோன்ற நடமாட்டம் ஒன்றும் புதிதல்ல, வழக்கமானதுதான். ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்திய ராணுவம் இறங்காது. ராணுவத்தின் நாட்டுப்பற்று குறித்து எவரும் சந்தேகம் எழுப்ப முடியாது. ராணுவத் தளபதியின் அலுவலகத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் இந்தச் செய்தி கொச்சைப்படுத்துவதாகவும். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும், .நமது ராணுவத்தின் மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது என்றார்.
ஆண்டனியை பதவி நீக்கம் செய்ய பாஜக கோரிக்கை:
இந் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்டனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது. பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications