2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: இத்தாலிய கப்பலை விடுவிக்க கேரள ஹைகோர்ட் மறுப்பு
திருவனந்தபுரம்: தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இத்தாலிய நாட்டு கப்பலை விடுவிக்கும் உத்தரவை கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலிய நாட்டு சரக்கு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் அந்த கப்பல் பறி்முதல் செய்யப்பட்டு கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கப்பலை விடுவிக்கும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் கப்பல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி கோபகுமார் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக ரூ.3 கோடிக்கு வங்கி உத்திரவாதம் வழங்குமாறும், எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் கப்பல் கேப்டனும், ஊழியர்களும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கப்பலை விடுவிக்கும்படி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், கப்பலை விடுவிக்கும் உத்தரவுக்கு கடந்த 2ம்தேதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. கப்பலை விடுவிக்கும் அதிகாரம் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்திற்கு தான் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கப்பலை விடுவிக்க நீதிபதி கோபகுமார் பிறப்பித்த உத்தரவை பெஞ்ச் ரத்து செய்தது.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கப்பலை பறி்முதல் செய்ய உத்தரவிட்ட கொல்லம் மாவட்ட நீதிமன்றத்துக்கு தான் கப்பலை விடுவிக்கும் அதிகாரமும் உள்ளது. எனவே கப்பலை விடுவிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் தான் கப்பல் நிறுவனம் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு ஒரு வாரம அவகாசம் அளிக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications