கடாபி, சதாம் போல மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகள் இருக்கின்றன: ஜே.வி.பி.

இது தொடர்பாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்கே கூறியுள்ளதாவது:
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா விதித்துள்ள தடையான இலங்கையின் பொருளாதாரத்தை நடப்பு ஆண்டில் மிகக் கடுமையாகப் பாதிக்கும். நாட்டின் அன்னிய முதலீடு 8 பில்லியன் டாலரில் இருந்து 5 பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது.
அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்போவதாக அறிவிக்கிறது. ஆனால் இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. நாடு இப்போது மிகப் பெரிய பொருளாதார சிக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
லிபிய தலைவர் கடாபி மற்றும் இராக் தலைவர் சதாம் ஹுசைன் போன்றவர்கள் சென்ற பாதையிலேயே இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அரசும் சென்று கொண்டிருக்கிறது. இலங்கையும் இப்போது ஒரு மாற்றத்தை நோக்கி செல்ல இருக்கிறது. மக்கள் இதற்குத் தயாராக இருக்க வேண்டும். வெள்ளை வேன் மூலம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதும் பிணையத் தொகை வசூலிப்பதும் சட்டத்தின் ஒரு பாதியாகி விட்டது.
நாட்டின் அனைத்து துறைகளுமே படுமோசமான முறையில் வீழ்ச்சிக் கண்டுள்ளது. நிதி நெருக்கடி மேலோங்கி சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு அரசாங்கம் விழுந்துள்ளது. மக்கள் மீது அன்றாடம் வரிச் சுமைகளை அரசு சுமத்தி வருகிறது. இந்தப் போக்கை கைவிட வேண்டும் என்றார் அவர்.
மகிந்த பேச்சு
சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்சே, கடாபியைப் போல இலங்கை மக்கள் என்னைக் கொல்லமாட்டார்கள்.. என் மீது பாசம் வைத்திருக்கின்றனர் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் சிங்கள தீவிரவாத அமைப்பான ஜே.வி.பி தரப்பில், கடாபியைப் போல செயல்படுகிறார் ராஜபக்சே என்று கூறியிருப்பது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications