கூடங்குளம் கரண்ட் பூராவையும் தமிழகத்திற்கே கொடுக்கச் சொல்லியிருக்கேன்- நாராயணசாமி
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் 2 மாதத்தில் மின் உற்பத்தி துவங்கும். அடுத்த 2 மாதத்தில் இரண்டாவது உலையிலும் மின் உற்பத்தி துவங்கும். அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பரிசீலித்து வருகிறார். இந்த கோரிக்கையை நானும் அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.
டெல்லி நோக்கி ராணுவம் படையெடுத்து வந்ததாக வெளியான தகவல் தவறானது. இது விஷமிகள் பரப்பிய வதந்தி ஆகும். அந்த வதந்தியைப் பரப்பியவர்கள் யார் என்று மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அனைத்து கட்சி உறுப்பினரும் இடம்பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அந்த குழுவில் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது விரைவில் தெரிவிக்கப்படும். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு குடியரசுத் தலைவர் வேட்பாளரை காங்கிரஸ் தேர்வு செய்யும் என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications