சென்னை,கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி
சென்னை: சென்னை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இன்று போடப்பட்டது.
சென்னை, கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயி ஒருவர் ஏற்கெனவே பலியாகியுள்ளார்.
இந்நிலையில் வேலூரிலும் நேற்று ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டாமி புளு மாத்திரைகள்
இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாமிபுளு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 லட்சம் மாத்திரைகள் தயாராக உள்ளன.
தடுப்பூசிகள்
மேலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகளும் இன்று முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளன.. மத்திய அரசிடம் இருந்து மொத்தம் 25 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் தடுப்பு ஊசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறது. இவை வந்த பிறகு பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications