விதம் விதமான உணவு வகைகளைப் பரிமாறி சர்தாரியை வியப்பில் ஆழ்த்திய மன்மோகன் சிங்!

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இன்று பிற்பகல் டெல்லி வந்தார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் மதிய உணவு விருந்தளித்தார். இந்த விருந்தில் தடபுடலான ஐட்டங்கள் ஏராளமாக இடம் பெற்றிருந்தன.
ஜெய்தூனி சீக் , கோஸ்ட் பாரா கபாப், பிந்தி குர்ஜுரி, பிர்னி என சகலவிதமான ஐட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தது இந்த விருந்தின் முக்கிய அம்சமாகும். தென்னகத்து மினி மசாலா தோசை, கிழக்கு இந்தியாவின் சந்தேஷ், வடக்கில் பிரபலமான கபாப் என விருந்து கலகலப்பாக, மொறுமொறுப்பாக சுவையோடு இருந்தது.
தர்பூசணியுடன் விருந்தைத் தொடங்கியுள்ளனர். சூப்பு, மினி மசாலா தோசை ஏன ஒவ்வொன்றாக அணிவகுத்து பாகிஸ்தான் விருந்தினர்களை வியப்படைய வைத்ததாம். சைவம், அசைவம் என இரு வகை உணவுகளும் பரிமாறப்பட்டன.
மட்டன், சிக்கன் என விதம் விதமான அசைவ வகை உணவுகள் பாகிஸ்தானியர்களை அசத்தின. காச்சி கோஸ்ட் பிரியாணிதான் இதில் விசேஷமானது. தமிழகத்தின் அவியலும் இந்த விருந்தில் இடம் பெற்றிருந்தது.
மொத்தத்தில் பாகிஸ்தான் அதிபர் மற்றம் அவருடன் வந்தவர்கள் இந்திய வகை உணவுகளை திருப்திகரமாக ருசி பார்த்து சந்தோஷமடைந்தார்கள் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications