எலும்பு முறிவு, சிகரெட் சூடு... உயிருக்குத் தவிக்கும் 3 மாத சிசு: கொடூர தந்தை கைது!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் உடல் முழுவதும் உள்ள காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது மருத்துவர்களுக்கே புரியவில்லை. ஆனால் குழந்தையை தினமும் அடித்து துன்புறுத்தியதோடு அதை யாரோ கழுத்தை நெறி்த்துக் கொல்லப் பார்த்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குழந்தையின் தந்தை உமர் பரூக்கை கைது செய்தனர்.
இது குறித்து குழந்தையின் தாய் ரேஷ்மா பானு கூறுகையில்,
அவர் ஏற்கனவே வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வந்தார். நான் கருவுற்றபோது ஆண் குழந்தை பிறக்கும் என்று பெரிதும் எதிர்ர்த்தார். ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் அவர் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் குழந்தையை கொல்ல முயன்றார். அப்ரீனை மருத்துவமனையில் சேர்க்கக்கூட எனது கணவரின் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றார்.
கடந்த ஜனவரி மாதம் தான் உடல் முழுவதும் காயங்களுடன் கோமா நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை பாலக் 3 மாத போராட்டத்திற்கு பிறகு மாரடைப்பால் மரணம் அடைந்தது. அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில் பெங்களூரில் இவ்வாறு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications