ஹரியானா: காப்பியடிக்க அனுமதி மறுப்பதா?: ஆசிரியரை "பலி" வாங்கிய கொலவெறி மாணவர்கள்
சோனாபட்: ஹரியானா மாநிலம் சோனாபட் நகரில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் காப்பியடிக்க அனுமதி மறுத்த இந்திய ஆசிரியரை கார் ஏற்றி படுகொலை செய்த மாணவர்களை காவல்துறையி போலீசார் தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் சோனாபட்டில் உள்ள ராம்ஜாஸ் மேல்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ராகேஷ். கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் ஹரி ஓம் மற்றும் விக்ரம் என்ற இரு மாணவர்கள் காப்பியடிக்க முயற்சித்தனர். இதை ராகேஷ் கண்டித்துள்ளார். அப்போதே ராகேஷை மாணவர்கள் இருவரும் ரொம்ப விலை கொடுக்க வேண்டிவரும் என்றும் எச்சரித்தனர்.
தங்களை காப்பியடிக்க விடாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும் தாங்கள் ஓட்டி வந்த காரை ராகேஷ் மீது மோதினர். இதில் ராகேஷ் துடிதுடித்து இறந்துபோனார். கொலைகார மாணவர்கள் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
இது தொடர்பாக ராகேஷின் சகோதரர் முகேஷ் கூறுகையில், இந்த பள்ளியில் 5 ஆண்டுகளாக ஆசிரியராக ராகேஷ் பணிபுரிந்தார். மிகவும் கனிவான ஆசிரியரான அவருக்கு நேர்ந்த கதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
மாணவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அந்த இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையிலும் இந்தி ஆசிரியர்:
அண்மையில் சென்னையில் இந்தி ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே மாணவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஆசிரியர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications