3ஜி சேவைகள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை: கபில்சிபல்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஏர்டெல்லின் 4ஜி தொழில்நுட்ப சேவை அறிமுக விழாவில் அவர் பேசியதாவது:
நமது நாட்டில் ஓராண்டுக்கு முன்பு 3ஜி சேவைகள் அறிமுகப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. பெரும்தொகை கொடுத்து அலைவரிசையை வாங்கியவர்கள் அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாமல் விட்டனர். இதனால் அது வெற்றிகரமானதாக இல்லாமல் போய்விட்டது.
நாட்டின் புதிய தொலைத்தொடர்பு கொள்கை மே மாதத்தில் அறிவிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுசார் கொள்கை அனேகமாக இந்த மாதத்தில் வெளியிடப்படக் கூடும்.
தற்போது ஏர்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் 4ஜி தொழில்நுட்பம் பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையில்தான் உள்ளது. உண்மையான 4ஜி தொழில்நுட்பம் 700 மெகாஹெட்ஸ் வரையிலான வேகத்தைக் கொண்டது. அனேகமாக நடப்பு நிதியாண்டில் இது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் சைபர் தாக்குதல்களிலிருந்து தபிக்க தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகளில் பாதுகாப்புதான் மிகவும் அவசியமானது. அப்படிச் செய்யாமல்விட்டால் நாமே ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதாகிவிடும் என்றார் கபில்சிபல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications