சிறையில் உள்ள மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்ய ஒரிசா போலீசார் சங்கம் எதிர்ப்பு
புவனேஸ்வர்: ஆளும் கட்சி எம்.எல்.ஏ, இத்தாலிய பயணி ஆகியோரை மீட்பதற்காக சிறையில் உள்ள மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று ஒரிசா மாநில போலீசார் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரிசா மாநில போலீசார் சங்கத் தலைவர் எஸ். சர்மா கூறியுள்ளதாவது:
55 பாதுகாப்புப் படையினரை படுகொலை செய்த செந்தா பனுஸானம் போன்ற மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் நிச்சயமாக ஒரிசா மாநில போலீசார் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
எந்த மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போலீசார் தியாகம் செய்து நாட்டைக் காப்பாற்றினார்களோ அந்த மாவோயிஸ்டுகளை கெளரவமாக விடுதலை செய்வதை ஏற்க முடியாது.
இந்த விவகாரத்தில் மாநில போலீசாரின் கருத்தையும் அரசாங்கம் கேட்கும் என்று தலைமைச் செயலாளர் பட்நாயக் தெரிவித்திருந்த நிலையில் மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் எமது சங்கத்தின் முடிவை கேட்க வேண்டும்.
எங்களது விருப்பத்துக்கு மாறாக மாநில அரசாங்கம் செயல்படுமேயானால் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் போலீசார் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றார் அவர்.
இதனிடையே எம்.எல்.ஏ.ஜிஹா கிஹாவை விடுதலை செய்ய வேண்டுமெனில் தமது இயக்கத்தினர் 30 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளதால் ஒரிசா மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications