பிரதிபா பாட்டீல் 23-வது வெளிநாட்டு பயணமாக ஆப்பிரிக்கா செல்கிறார்

நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீல் இதுவரை 12 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு மொத்தம் 22 நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் ரூ205 கோடி செலவிடப்பட்டது என அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
பிரேசில், மெக்சிகோ, சிலி, பூட்டான், வியட்நாம், இந்தோனேசியா, ஸ்பெயின், போலந்து, ரசியா, தஜிகிஸ்தான், இங்கிலாந்து, சைப்ரஸ், சீனா, லாவோஸ், கம்போடியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிரியா, மொரிஷீயஸ், தென்கொரியா, மங்கோலியா, சுவிட்சர்லாந்து மற்ரும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பிரதிபா சென்று திரும்பியுள்ளார். மொத்தம் 79 நாட்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கிறார்.
குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் 7 பயணங்கள் மூலமாக 17 நாடுகளுக்கும் கே.ஆர். நாராயணன் 6 பயணங்கள் மூலமாக 10 நாடுகளுக்கும் சங்கர் தயாள் சர்மா தமது பதவி காலத்தில் 4 பயணங்கள் மூலமாக 16 நாடுகளுக்கும் சென்றிருந்தனர்.
குடியரசுத் தலைவராக இருந்த ஜைல்சிங் தான் குறைவான பயணம் மேற்கொண்டவர் என்று அவரது ஊடக ஆலோசர் தல்ரோஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஏப்ரல் 27 அல்லது 28ம் தேதி ஆப்பிரிக்க பயணம் மேற்கொள்ளக் கூடும். மே 8ம் தேதி நாடு திரும்புவார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜூலை மாதத்துடன் பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications