அரியலூர் அருகே பெண் சிசு உயிரோடு புதைக்கப்பட்டதா?- தாயிடம் போலீஸ் விசாரணை
அரியலூர்: பிறந்த சில மணிநேரத்திலேயே பெண் சிசு புதைக்கப்பட்ட விவகாரத்தில் தாய் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த மலத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வள்ளி. இவரது கணவர் கணேசன் 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
இந்நிலையில் வள்ளிக்கு நேற்று அதிகாலை பெண்குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்துள்ளார் வள்ளி.
இது கிராம மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி சிவனேசனிடமும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கணவர் இறந்துவிட்ட நிலையில் கள்ளத் தொடர்பின் மூலம் குழந்தை பிறந்ததால் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சிவனேசன், போலீஸில் புகார் கூறினார்.
இதையடுத்து வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்ட சிசுவின் உடலை போலீஸார் தோண்டி எடுத்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்..
குழந்தையை உயிரோடு புதைத்தனரா? அல்லது உண்மையிலேயே குழந்தை இறந்தே பிறந்ததா? என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும்.
மேலும் இது தொடர்பாக குழந்தையின் தாய் வள்ளி மற்றும் அவர்களது உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications