நீங்க ஏன் திருவாரூர் போனீங்க?..நீங்க ஏன் ஸ்ரீரங்கம் போனீங்க..? திமுக-அதிமுக வாக்குவாதம்

உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சரான கே.பி.முனுசாமி பதிலளித்துப் பேசுகையில்,
இந்த ஆட்சியில் 2 நிதியாண்டுகளில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் ரூ.329 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய் கூட இதற்காக ஒதுக்கவில்லை. அதனால் தான் சென்னையை தங்களது கோட்டை என்று கூறியவர்கள் அதனை கோட்டை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது என்றார்.
மு.க.ஸ்டாலின் (திமுக): திமுக தலைவர் கருணாநிதி சொந்த ஊருக்குச் சென்றார். ஆனால், உங்களுடைய தலைவர் ஏன் ஸ்ரீரங்கம் சென்றார்?
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: நீங்கள் எப்போதும் சென்னையிலேயே போட்டியிடுபவர்கள். ஆனால் முதல்வர் ஜெயலலிதா எப்போதுமே கிராமங்கள் மேம்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு போட்டியிடுவது வழக்கம். மேலும் எங்கள் தலைவி போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதி, அவரது பாட்டி பிறந்த மண் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறார்.
துரைமுருகன் (திமுக): எங்கள் தலைவர் குளித்தலை, தஞ்சாவூர், சென்னை என பல இடங்களில் போட்டியிட்டு இருக்கிறார்.
கே.பி.முனுசாமி: இதற்கு முன்பு நடந்த பேரவைத் தேர்தலிலேயேகூட அவர்களுக்கு (திமுக) வெற்றி என்பது குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே கிடைத்தது. கடைசி காலத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டாம் எனக் கூறி சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். இவர் (ஸ்டாலின்) ஆயிரம் விளக்கை விட்டு விட்டு கொளத்தூருக்குச் சென்று விட்டார்.
துரைமுருகன்: எங்கள் தலைவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் தோற்றதே கிடையாது என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications