கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இலங்கை திடீர் எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எதிர்பாராவிதமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டால் அது இலங்கை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் இருந்து வெறும் 240 கி.மீ. தூரத்தில் தான் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது.
பசுமை வீடுகளின் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்தால்(கிரீன் ஹவுஸ் கேஸஸ்) புயல், பெருமழை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும். இந்தியாவில் இது வரை அதிகபட்சமாக 200 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகளே அமைக்கப்பட்டன. தற்போது கூடங்குளத்தில் முதன்முறையாக 1000 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த அணு உலைகளை நிர்வாகிப்பதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் பெரிய ஆபத்து ஏற்படும் என்று இலங்கை கூறியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச அணு சக்திக் கழகமான IAEA-வின் பார்வைக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் இலங்கை கூறியுள்ளது.
கருணாநிதி கண்டனம்:
இந் நிலையில் இன்று சட்டசபையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி கூறுகையில், கூடங்குளம் அணு மின் நிலைய வேலை ஏதோ நேற்று தொடங்கியதுபோல இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அந்தத் திட்டத்தை நேற்று ஆரம்பிக்கவில்லை. நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது அணு மின் நிலையத்திற்கு திடீரென எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூற மாட்டேன். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேதி அறவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications