தமிழகத்தை பயமுறுத்தும் ஸ்வைன்: இதுவரை 32 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இதுவரை 32 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதன் முதலாக சென்னையில் தான் பன்றிக் காய்ச்சல் பரவியது. வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த 3 பேரால் தமிழகத்திற்குள் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது.
அது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதையடுத்து சென்னையில் மட்டும் 14 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது. அவர்கள் 11,13,14 வயது சிறுவர், சிறுமியர் ஆகும். அதில் 11, 14 வயது சிறுமிகள் ராயபேட்டையைச் சேர்நத்வர்கள் ஆவர்.
மேலும் மயிலாப்பூரில் 3 வயது ஆண் குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில் மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 17க உயர்ந்துள்ளது.
இதே போன்று கோவையிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏற்கனவே 75 வயது விவசாயி ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பலியானார். இதைத் தொடர்ந்து 6 பேருக்கு பன்றிக் காய்சச்ல் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 4 பேரை பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இது தவிர திருப்பூரில் 2 பேர், திருவள்ளூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 32 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் யார் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார் யாருக்காவது அந்த பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செயய்யப்பட்டது. மேலும் அவர்ககளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களால் பன்றிக் காய்ச்சல் பரவியதால் ரயில் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட சோதனையின்போது காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வந்த 56 பயணிகளை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதே போன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 26 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை. விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் எந்த பயணிக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை.
ரயில் மற்றும் விமான நிலையங்கள் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications