நாடு முழுவதும் நடக்கும் போலி என்கவுண்டர்களையும் விசாரியுங்கள்-குஜராத் அதிரடி வழக்கு!

இதுதொடர்பாக குஜராத் அரசு தாக்கல் செய்திருந்த மனுவில்,
போலீசாரால் செய்யப்படும் என்கவுன்டரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு குழுக்கள் கண்காணித்து வருகின்றன. ஆனால் குஜராத் மாநிலத்தை மட்டும் கூடுதலாக கண்காணித்து அம்மாநில போலீசை தாக்குகின்றனர். போலி என்கவுன்டர்கள் நாடு முழுவதும் நடப்பதால் அவை அனைத்தையும் விசாரிக்க ஒரே முறையை பின்பற்ற வேண்டும். இதற்கென தனி கொள்கைகளை வகுத்து தனி அமைப்பை ஒன்றையும் உருவாக்க வேண்டும்.
போலி என்கவுன்டர்களை கண்காணிக்க குஜராத் சார்பாக சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு போலி என்கவுன்டர்களைக் குறித்து விசாரணை நடத்துகிறது.
இந்த அமைப்பு செயல்படுவது போல் நாடு முழுவதும் உள்ள கண்காணிப்புக் குழுக்கள் ஒரே மாதிரியாக செயல்பட உத்தரவிட வேண்டும். இதனால் மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோரை கொண்ட பெஞ்ச் ஏற்றுக்கொண்டது. மேலும் இதுகுறித்து பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத்தில் பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்களில் பலர் கொலையாகியுள்ளனர். இதில் இஷ்ரத் ஜெகான், சோராபுதீன் ஷேக் ஆகியோரின் கொலைகள் முக்கியமானவை. இதுகுறித்து சிபிஐ மற்றும் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுப் படைகள் விசாரித்து வருகின்றன. மேலும் இந்த வழக்குகளை உச்சநீதிமன்றமே நேரில் கண்காணித்தும் வருகிறது. இந்த நிலையில் அத்தனை மாநிலங்களிலும் நடைபெறும் போலி என்கவுண்டர்கள் தொடர்பாக பிரச்சினையை எழுப்பியுள்ளது குஜராத் அரசு என்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications