திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் ஜி.கே. மணி அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் பாமக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜி.கே. மணிக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு மருத்துவர்கள் அங்கு பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

ஜி.கே. மணியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் வீடுதிரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஜி.கே.மணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜி.கே.மணி தர்மபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு டாக்டர்கள் பரிசோதித்து முதலுதவி அளித்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர். அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+