கூலி உயர்வு கோரி நெல்லையில் 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக 12-10-2010ல் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக இறுதி அரசாணை வெளியிடாததால் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த பீடி நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இதனால் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை.
முத்தரப்பு ஒப்பந்தம் தொடர்பாக இறுதி அரசாணை வெளியிடக் கோரியும், ஒப்பந்தப்படி 1,000 பீடி சுற்றுக்கு ரூ.121.75 கூலி வழங்க வலியுறுத்தியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாக பீடித் தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் சுந்தர்ராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சமூக தீர்வு ஏற்படவில்லை. அரசாணை வெளியிட்டால் தான் கூலி உயர்வு அமல்படுத்த முடியும் என்று பீடி நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் திட்டமிட்டப்படி நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது.
இது குறித்து தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்,
முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு 2 ஆண்டு ஆகியும் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. முழுக்க முழுக்க இதற்கு அரசு தான் காரணம். அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும். நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், பேட்டை, பாளை, தச்சநல்லூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை, சேர்ந்தமரம், களக்காடு, ஏர்வாடி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாரும் பீடி சுற்ற மாட்டார்கள்.
இலை, தூள் வாங்குவதற்கு கம்பெனிகளுக்கு செல்ல மாட்டார்கள். மீண்டும் இன்று (18ம் தேதி) பேச்சுவார்த்தை நடக்கிறது. கூலி உயர்வு தொடர்பான உத்தரவாதம் அளித்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications