இந்திய குழுவை ஏமாற்ற முல்லைத் தீவு மருத்துவமனையை அவசரமாக சீரமைக்கும் இலங்கை

இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்விற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது.
இந்த குழு இலங்கையில் 6 நாட்கள் தங்கி வவுனியா, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம், காங்கேன் துறை, கலுதரா, டிக்கோயா, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு தமிழர்களின் மறுவாழ்விற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிடுகின்றனர்.
இந்த குழு இன்று அல்லது நாளை மறுநாள் முல்லைத் தீவுக்கு செல்கிறது. இதையடுத்து முல்லைத் தீவில் உள்ள மாஞ்சோலை மரு்ததுவமனையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இத்தனை நாட்களாக கவனிப்பாரின்றி கிடந்த மருத்துவமனையை எம்.பி.க்கள் குழு வருவதையொட்டி அவசர, அவசரமாக சீரமைக்கின்றனர்.
மருத்துவமனைக்கு செல்லும் பாதையை சீரமைத்தல், வீதியின் இருபுறத்தையும் அழகுபடுத்துதல், மருத்துவமனையின் பெயர் பலகையை மாற்றுதல், அங்குள்ள விடுதிகளுக்கு பெயர் மற்றும் இலக்கமிடுதல் உள்பட பல்வேறு பணிகளை இலங்கை ராணுவம் துரிதமாக செய்து வருகிறது.
இந்திய குழு அங்கு செல்லும்போது அந்த மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் நல்லபடியாக செயல்படுவது போன்று காண்பிக்கத்தான் இந்த ஏற்பாடுகள் என்று அங்குள்ள தமிழர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா முல்லைத் தீவு சென்றிருந்தபோதும் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications