கர்நாடகத்தில் மின்வெட்டு புகார் கொடுக்க கால்சென்டர்

பொது மக்கள் தங்கள் பகுதியில் கரண்ட் கட் என்றால் உடனே 18004252627 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பகுதியில் உள்ள மின் பிரச்னை குறித்து தெரிவிக்கலாம்.
இந்த எண்ணுக்கு 25 லைன்கள் அளிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், பெங்களூர் நகர வாடிக்கையாளர்களுக்காவே பிரத்யேக கால் சென்டரும் திறக்கப்பட்டுள்ளது. 080 - 22873333 என்ற எண்ணுக்கு பெங்களூர் நகர வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு தங்களது ஏரியாவில் உள்ள மின்சார பிரச்னைகளை தெரிவிக்கலாம்.
புகார் அளித்ததும் புகாருக்கான எண்ணை கால்சென்டர் ஊழியர்கள் அளிப்பார்கள். விரைவில் புகார் குறித்த பிரச்சனையை நீக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கும். இது 24 மணி நேர சேவையாகும்.
தமிழகத்தில் இது போன்ற ஒரு நிலை இல்லையே என நீங்கள் ஏங்குவது நன்றாக தெரிகிறது. விரைவில் தமிழகமும் மின்துறையில் தன்னிறைவு அடையும்போது உங்கள் ஆசை பூர்த்தியாகலாம்!












Click it and Unblock the Notifications