உழைப்பிற்கு வயதில்லை: 109 வயது "இளைஞருக்கு" அரசு விருது வழங்க கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர்(109). கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து வருகிறார். வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார். மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியைப் பெற்றுக்கொள்ளு்ம் இவர் பேரம் பேசுவதில்லை.
இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும்போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்த முதிய வயதிலு்ம் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் இருக்கும் ஈடுபாடு தான்.
இது குறித்து சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் செயலாளர் நல்ல இப்ராகிம் ஆகியோர் கூறுகையில்,
ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பான செயல்களுக்காக பல்வேறு விருதுகளை அறிவித்து பலரையும் கெளரவப்படுத்துகிறது. அந்த வகையில் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் 100 ஆண்டுகளைக் கடந்த மூத்த குடிமகனான அபுதாகிர் அவர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்றனர்.
ஏற்கனவே இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று, நீண்ட ஆயுளை பெற ஈமான டைம்ஸ் வாழத்துகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications