மேனனை விடுவிக்க நக்ஸல்களுடன் பேச (ஹசாரே குழுவின்) பிரசாந்த் பூஷன் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

Prashant Bhushan, Anna Hazare and Alex Paul Menon
ராய்ப்பூர்: நக்ஸல்களால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சட்டீஸ்கர் மாநில கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்கச் செல்லும் குழுவில் இடம் பெற அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் மறுத்துவிட்டார்.

இந்த விவகாரத்தில் இந் நிலையில் நக்ஸல்களுடன் பேச்சு நடத்த முதல்வர் ரமன் சிங் தனது தலைமையில் ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்தார். ஆனால், அதை நக்ஸல்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

மாறாக, தாங்களே ஒரு குழுவை அறிவித்துள்ளனர். அவர்கள் தான் தங்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என நக்ஸல்கள் கோரியுள்ளனர். நக்ஸல்கள் அறிவித்துள்ள குழுவில் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பழங்குடியினர் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற மனிஷ் குஞ்சம், பிடி சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இடம் பெற பூஷன் மறுப்பு:

ஆனால், இந்தக் குழுவில் இடம் பெறவோ, நக்ஸல்களுடன் பேச்சு நடத்தவோ பூஷன் மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், கலெக்டரை விடுவிக்குமாறு நக்ஸல்களுக்கு கோரிக்கை விடத் தயாராக இருக்கிறேன். ஆனால், பேச்சு நடத்தச் செல்லத் தயாராக இல்லை. முதலில் அவரை நக்ஸல்கள் விடுவிக்கட்டும், அதன் பின்னர் பேசலாம் என்றார்,

மேனனை விடுவித்த பிறகு இவர் போய் என்ன பேசுவாரோ தெரியவில்லை.

அரசின் புதிய குழு:

இந் நிலையில் நக்ஸல்களுடன் பேச்சு நடத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான எஸ்.கே.மிஸ்ரா, நிர்மலா புச் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை சத்தீஸ்கர் மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

மற்றொரு கலெக்டருக்கு குறி:

இந் நிலையில் மேனனை கடத்திய அதே நாளில் தண்டேவாடா மாவட்ட கலெக்டர் ஓம்பிரகாஷ் சவுத்ரியை கடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், சவுத்ரி கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததால், அவர் தப்பினார். இதையடுத்து ஓம்பிரகாஷ் சவுத்ரிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் ஆலோசனை:

இதற்கிடையே, கலெக்டர் மேனன் கடத்தப்பட்டது பற்றி விவாதிக்க டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு தாக்கீது அனுப்பியுள்ளது. அதில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மாவோயிஸ்டு பகுதிகளுக்கு செல்லும்போது, எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+