10 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்: மே 5க்குள் முடிக்க உத்தரவு
நெல்லை: 10ம் வகுப்பு தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்தன. விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை(26ம் தேதி) தொடங்குகிறது. மே 5ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த 4ம் தேதி தொடங்கின. தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக 3 ஆயிரத்து 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வுகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன. தேர்வுகள் முடிந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் நாளை தொடங்கிறது. இதற்காக 66 கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள முகாம் அலுவலர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர். நெல்லை கல்வி மாவட்ட முகாம் அலுவலராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுடலைமணி பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி இக்னேஷியஸ் கான்வென்ட்டில் நடக்கிறது.
சேரன்மகாதேவி கல்வி மாவட்ட முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் முருகன் பொறுப்பேற்றார். இந்த கல்வி மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு்ள்ள விடைத்தாள்கள் வள்ளியூர் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. தென்காசி கல்வி மாவட்ட முகாம் அலுவலராக தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் பொறுப்பேற்றார். இந்த கல்வி மாவட்டத்துக்கு அனுப்பப்படும் விடைத்தாள்கள் திருத்தும் பணி கடையநல்லுர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications