பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்-அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா

தேனி - குமுளி நெடுஞ்சாலையில், லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் இந்த மணிமண்டபம் அமைகிறது. இங்கு பென்னிகுயிக்கின் முழு உருவச் சிலையும் நிறுவப்படுகிறது.
இதற்கான அடிக்கல்லை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
பென்னிகுயிக்கை தேனி மாவட்ட மக்கள் தங்களைக் காத்த தெய்வமாக வணங்கி வருகின்றனர். மேலும் ஐந்து மாவட்ட மக்களின் வறட்சியைப் போக்கியதால் பென்னிகுயிக்குக்கு தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னி என்று பெயரிடுவது வழக்கமாக உள்ளது.
பென்னிகுயிக்கின் மணிமண்டபம் 2500 சதுர அடிப் பரப்பளவில் அமையவுள்ளது. இதற்காக ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு பென்னிகுயிக்கின் பேரன் அழைக்கப்படுவார் என்றும் முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications