25 வருடங்களுக்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாம் லின்டர்ஸ்டிரோம்-அமிதாப்

போபர்ஸ் விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் அமிதாப்பும் கூட ஒருவர். ஆனால் அவருக்கும், இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை. அவரது பெயரைச் சம்பந்தப்படுத்த இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக முயன்றன என்று லின்டர்ஸ்டிரோம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை அமிதாப் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன். எனது நிலை சரி என்பதை லின்டர்ஸ்டிரோமின் பேட்டி உணர்த்துகிறது. நான் நிரபராதி என்பது இப்போதாவது வெளிச்சத்திற்கு வந்ததே.
லின்டர்ஸ்டிரோமின் பேட்டி குறித்து அறிந்து நானும், எனது குடும்பத்தினரும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம். நாங்கள் நிரபராதிகள் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இன்று வரை இல்லை.
இந்த சான்றிதழை லின்டர்ஸ்டிரோம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பே இது வந்திருக்கலாம். இந்த கால கட்டத்தில் நானும், எனது குடும்பத்தினரும் பட்ட கவலைகள், வேதனைகள், அவமானங்களை சொல்லில் வடிக்க முடியாது. இப்போது நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்.
எனக்கு பெரும் வேதனை என்னவென்றால் எனது பெற்றோர் உயிருடன் இருந்தபோதே உண்மை வெளிவராமல் போய் விட்டதே என்பதுதான். எனது தந்தை, போபர்ஸ் சர்ச்சை வெடித்தபோது நீ ஏதாவது தவறு செய்திருக்கிறாயே என்று என்னைப் பார்த்துக் கேட்டபோது நான் துடித்துப் போய் விட்டேன். என்ன பதில் சொல்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை. என் பெயர் போபர்ஸ் விவகாரத்தில் இழுக்கப்பட்டதால் எனது தந்தை பெரும் வேதனை அடைந்தார். ஆனால் இன்று உண்மை என்னிடம் இருக்கும்போது, எனது தந்தை என்னிடம் இல்லை.
வயதான காலத்தில், தங்களது வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் பெரும் வேதனையைச் சுமந்தபடி அவர்கள் மரணத்தை சந்தித்தது எனக்கு நீங்காத வேதனையாக என்றும் இருக்கும்.
எனது பெயரை திட்டமிட்டு வேண்டும் என்றே சேர்த்தனர் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இந்த்த தகவல் லின்டர்ஸ்டிரோமுக்கு முன்பே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இத்தனை காலமாக இதை ஏன் சொல்லாமல் மறைத்து வந்தார் என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
மறைந்த ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் அமிதாப் பச்சன். ராஜீவ் காந்தியின் பெயர் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் சிக்கியபோது அமிதாப் பச்சனும் சேர்ந்து சிக்கினார். பின்னர் ராஜீவ் குடும்பமும், அமிதாப் குடும்பமும் நட்பிலிருந்து பிரிந்து போய் விட்டது. என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications