ரூ985 கோடியில் மும்பையில் அலுவலகம் வாங்கிய சிட்டிகுரூப்!

புர்னேந்து சட்டர்ஜீ குழுமத்திடமிருந்து 2 லட்சத்து 97 ஆயிரம் சதுர அடி உள்ள மும்பையின் பந்த்ரா குர்லா வளாகத்தை சிட்டிகுரூப் வாங்கியுள்ளது. இது 6 மாடிகள் கொண்டது. மும்பை மற்றும் இதர நகரங்களில் இயங்கி வரும் சிட்டிகுமுழு அலுவலகங்களை ஒருங்கிணைக்கக் கூடிய வகையில் இந்தியாவின் மைய அலுவலகம் இந்த இடத்தில் இயங்க உள்ளது.
இந்த இடத்தை வாங்குவதற்கான கடைசிகட்டத் தொகை கடந்த ஜூன் மாதம் கொடுக்கப்பட்டது. சிட்டிகுரூப் நிறுவனத்திடம் அடுத்த சில மாதங்களில் இந்த வளாகம் முழுமையாக ஒப்படைக்கப்பட உள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள வர்த்தகத் துறை அதிகாரிகள், 2008-ம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது மும்பையில் 50 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ள நிலையில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களுக்கான இடத்தை வாங்க தற்போதைய சூழலே சரியான தருணம் என்று கருதுகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது தலைமையகத்தை அமைக்கவோ அல்லது கிளை நிறுவனத்தை அமைக்கவோ இடங்களை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications