வங்கிக் கிளையை மாற்ற விரும்பினாலும் பழைய அக்கவுண்ட் நம்பரையே பயன்படுத்தலாம்
மும்பை: நீங்கள் ஒரு வங்கியில் கணக்கு எண்ணை வைத்திருக்கிறீர்கள் எனில் வேறு இடத்துக்கு குடியேறினாலும் இனி கவலையே தேவையில்லை... அதே கணக்கு எண்ணை நீங்கள் பின்பற்றலாம் என்கிரது ரிசர்வ் வங்கி.
திருச்சியில் பணிபுரியும் நீங்கள் அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு எண்ணை வைத்திருப்பீர்கள். சென்னைக்கு உங்களுக்கு இடமாறுதல் கிடைக்கிறது எனில் சென்னையில் வந்து மீண்டும் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
சென்னையில் நீங்கள் இருக்கும் இடத்தில் அந்த வங்கியின் கிளை இருந்தால் போதும்.. திருச்சியில் பயன்படுத்திய அதே அக்கவுண்ட் நம்பரையே தொடர்ந்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்..
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் கணக்குத் தொடங்கும்போது அவர் வேறு ஒரு கிளைக்கு தமது கணக்கை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதே அக்கவுண்ட் நம்பரையே அவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். புதிய வங்கிக் கணக்கு ஒன்றுக்கான நடைமுறைகள் எதனையும் பின்பற்றத் தேவையில்லை. வேறு ஒரு கிளையில் உள்ள வங்கிக் கணக்கு எண்ணையே தொடர்ந்து பராமரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications