ஊட்டியில் மு.க.ஸ்டாலின்... பேரக் குழந்தையுடன் குதிரை சவாரி!
சென்னை: தி.மு.கவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஊட்டியில் குடும்பத்துடன் சவாரிகள் செய்து மகிழ்ந்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்தார். ஊட்டியில் தங்கி இருந்த மு.க.ஸ்டாலின், அவரது மனைவி, பேரக்குழந்தையுடன் தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்றழைக்கப்படும் தொட்டபெட்டாவுக்கு நேற்று சென்றார். தொட்டபெட்டாவில் உள்ள டெலஸ்கோப் கருவி மூலம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளையும், இயற்கை காட்சிகளையும் பார்த்து மகிழ்ந்தார்.
அதன் பின்னர் ஊட்டி படகு இல்லத்துக்கு அவர்கள் சென்றனர். அங்கு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் படகு சவாரி செய்தனர். படகு இல்லத்தில் ஓடும் மினி ரயிலிலும் அவர்கள் சவாரி செய்து மகிழ்ந்தனர். தனது பேரக்குழந்தைக்காக குதிரை சவாரியும் செய்தார் மு.க. ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications