புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிக்குழு: மேலும் 9 பேரை அறிவித்தார் ஜெ!
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுவில் மேலும் 9 பேர் இடம்பெறுவர் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.
ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. தி.மு.க.வின் நிலைப்பாடு மே 17-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் பணிக்குழுவில் மேலும் 9 பேர் இடம் பெறுவர் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா அறிவித்துள்ள கூடுதல் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்
இ.மதுசூதனன் (அவைத் தலைவர்),
டாக்டர்.மு.தம்பிதுரை, எம்.பி. (கொள்கை பரப்புச் செயலாளர்,)
டாக்டர்.பி.வேணுகோபால், எம்.பி. (மருத்துவ அணிச் செயலாளர்)
கே.கே.கலைமணி (மீனவர் பிரிவுச் செயலாளர்),
ஆர்.கமலகண்ணன் (ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்),
எம்.ரெங்கசாமி, எம்.எல்.ஏ. (தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்),
மா.ரவிச்சந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்),
கே.ஆர்.முருகானந்தம் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்),
ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட், எம்.பி.
இதன் மூலம் புதுக்கோட்டை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிககுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications