உலக அமைதிக்காக காளை மாட்டுக்கு திருமணம் செய்து வைத்த காங். எம்.எல்.ஏ.
திருப்பதி: உலக அமைதிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகேஸ்வர ராவ் காளை மாட்டுக்கும், பசுவுக்கும் திருப்பதியில் திருமணம் செய்து வைத்தார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் தனுக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ். அவர் தனது ஆதரவாளர்கள் 70 பேருடன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷனசாலா என்னும் மாட்டுப் பண்ணைக்கு சென்றார். அங்கு அய்யர் ஹோமம் வளர்த்து, வேத மந்திரம் ஓதி, முறைப்படி தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் காளை சார்பில் மணமகள் பசு கழுத்தில் தாலி கட்டப்பட்டது.
உலக கால்நடை தினமான கடந்த சனிக்கிழமை இந்த வித்தியாசமான திருமணம் நடந்தது. உலக அமைதிக்காக அவர் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மணமக்கள் நெற்றியில் தனது கையால் குங்குமம் வைத்துவிட்ட எம்.எல்.ஏ. சடங்குகள் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிக்கு மாட்டுத்தீவனம் மற்றும் வாழைப்பழம் கொடுத்தார்.
இந்த திருமண விழாவில் பண்ணையின் தலைவர் கே. ஹரிநாத் ரெட்டி உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு அந்த மாடுகள் திருப்பதி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. திருப்பதியில் இதுபோன்ற வித்தியாசமான திருமணம் நடந்தது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications