அரசு சொல்லித் தான் வெளிநாடுகளுக்கு செல்கிறேன்: பிரதீபா பாட்டீல்

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 25ம் தேதியுடன் முடிகிறது. அவர் தனது பதவிக்காலத்தில் அதிகபட்சமாக 22 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வெளிநாட்டுப் பயணங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் அவர் இது குறித்து கூறுகையில்,
அரசு சொல்லித் தான் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். நானாக ஒன்றும் செல்லவில்லை. பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்த தான் நான் பயணம் மேற்கொண்டு வருகிறேன். பிற நாடுகளுடனான உறவு அரசியல் தவிர்த்து பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் என பலவிதங்களில் உள்ளது. அப்படிபட்ட சூழலில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த உதவுகிறது.
அரசு என்னை மேலும் 2-3 நாடுகளுக்கு சென்று வருமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் நேரம் இல்லாததால் அரசின் கோரிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.
பிரதீபா பாட்டீல் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு 2 நாள் பயணமாக செஷல்ஸ் சென்றுள்ளார். அதையடுத்து தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications