கருங்கல் ஊராட்சிக்கு மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது: கலெக்டர் வாழ்த்து
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கல் ஊராட்சிக்கு மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கணக்கு பராமரிப்பில் தன்னிறைவு பெறும் ஊராட்சிக்கு நிர்மல் புரஸ்கார் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருது பாராட்டுச் சான்றிதழ், கேடயம், மக்கள் தொகைக்கு தகுந்தவாறு நிதி ஆகியவற்றை உள்ளடக்கியது.
கடந்த 2011-2012ம் ஆண்டிற்கான நிர்மல் புரஸ்கார் விருதுக்கு கருங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. கடந்த 24ம் தேதியன்று டெல்லியில் நடந்த விழாவில் கருங்கல் ஊராட்சி தலைவர் வீராச்சாமிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிர்மல் புரஸ்கார் விருதை வழங்கினார்.
இதையடுத்து வீராச்சாமி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலத்தை சந்தித்து தான் வாங்கிய விருதைக் காண்பித்தார். இதையடுத்து கலெக்டர் வீராச்சாமியை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
சிறந்த நிர்வாகம் மற்றும் கணக்கு பராமரிப்புக்காக கருங்கல் ஊராட்சிக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications