மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!

நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் 293வது வாரிசாக மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதற்கு சகல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்திற்குட்பட்ட கோவிலான கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை மீட்க வலியுறுத்தி 8 கிராம மக்கள் அணி திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆதீனம் வசம் மொத்தம் 4 கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த கஞ்சனூர் கோவில். திருவிடைமருதூர் அருகே இக்கோவில் உள்ளது.
மதுரை ஆதீனம் எடுத்த முடிவால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ள கஞ்சனூர், கோட்டூர், மணலூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இனிமேல் மதுரை ஆதீனம் இந்தப் பக்கம் கூட வரக் கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளனர்.
மேலும் சுக்கிரன் கோவிலை மதுரை ஆதீனத்திடமிருந்து மீட்பதற்காக மீட்புக் குழு ஒன்றையும் அதிரடியாக அமைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் அழுக்கு படிந்த மதுரை ஆதீனம் கால்படாமலிருக்க கோயிலை அரசு கையில் எடுக்க வேண்டும் . இல்லையென்றால் இந்த கோயிலை சுற்றியிருக்கும் திருவாடு துறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், தர்மபுரம் ஆதீனம் இவை எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மதுரை ஆதீனத்திற்கு எதிராக 8 கிராம மக்கள் படை கிளம்பியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications