கேரளாவில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ தங்க நகைகள் கொள்ளை
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் உள்ளது சோனா பேஷன் ஜுவல்லரி. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அடைத்துவிட்டு ஊழியர்களும், உரிமையாளரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு வந்த கொள்ளையர்கள் கடையின் பின்புறம் உள்ள சுவரில் ஓட்டைப்போட்டு அதன் வழியாக கடைக்குள் நுழைந்தனர்.
பின்பு கடையில் இருந்த 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவி்ட்டனர். நேற்று காலை கடையைத் திறந்த ஊழியர்கள் நகைகள் மாயமானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அவர்கள் கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகிறார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications